
தமிழகத்தில் தற்போதைக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழக நிதித்துறை அமைச்சர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தபோது அரசுப் பேருந்துகளை ஒரு கிலோ மீட்டர் இயக்கினால் ரூ. 59 நஷ்டம் ஏற்படுவதாக கூறியதையடுத்து, பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தன.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது,
தமிழகத்தில் தற்போதைக்கு அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை. நிதிசுமைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். போக்குவரத்து கழகம் புதிய பொழிவுடன் இனி செயல்படும்.
மேலும், பேருந்து நிறுத்தங்களில் அம்மா குடிநீர் மீண்டும் விற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வண்டலூரில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் இந்த ஆட்சியில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.