மழை பெய்ததால் அழுகிய நிலையில் வெங்காயம்: விவசாயிகள் கவலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  கண்ணியம்பட்டியில் நான்கு நாள்களாக மழை பெய்ததால் வெங்காயம் அழுகிய நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
மழை பெய்ததால் அழுகிய நிலையில் வெங்காயம்
மழை பெய்ததால் அழுகிய நிலையில் வெங்காயம்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கண்ணியம்பட்டியில் நான்கு நாள்களாக மழை பெய்ததால் வெங்காயம் அழுகிய நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட பி கண்ணியம்பட்டி கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் அறுவடை செய்யும் நிலையில், கடந்த நான்கு நாள்களாக பெய்த மழையினால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் முற்றிலும் அழியும் நிலையில் ஏற்பட்டது. 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாய தொழிலில் முதலீடு செய்தும் மற்றும் அவற்றுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், கடந்த நான்கு நாள்களாக பெய்த மழையால் விளைந்த வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இது சம்பந்தமான விவசாயத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com