புதிதாக 1000 பேருந்துகள்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
புதிதாக 1000 பேருந்துகள்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

புதிதாக 1000 பேருந்துகள்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு, புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு, புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெடகூட்டத் தொடர் சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதில் அவர் அறிவித்திருப்பதாவது, 

தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு, புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கு டீசல் மானியமாக ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மெட்ரோ ரயில் போக்குவரத்தின் 2ஆம் கட்டப் பணிகள் 2026க்குள் நிறைவு பெறும்.

தமிழகத்தில்தான் அதிக அளவிலான தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளில் புறவழிச்சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

17,899.17  கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com