பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

7 தொழிலாளர்களுக்கு கரோனா: பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலை மூடல்

பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் 7 தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 4:19 pm

DIN

பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் 7 தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டது.

கோவை மாட்டம், பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலை ஒன்றில் 186 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அவர்களில் 7 தொழிலாளர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கரோனா உறுதியானதையடுத்து தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 7 பேர் கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  186 தொழிலாளர்களில் 101 பேர் தடுப்பூசி போட்டுள்ளதாகவும் மற்றவர்கள் தடுப்பூசி போடவில்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.