தமிழகத்தில் இன்று மேலும் 1,896 பேருக்கு கரோனா; 23 பேர் பலி
தமிழகத்தில் புதிதாக 1,896 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


தமிழகத்தில் புதிதாக 1,896 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் இதுவரை 3.98 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 25 லட்சத்து 88,781 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 225 பேருக்கும், சென்னையில் 216 பேருக்கும், ஈரோட்டில் 179 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து இன்று மேலும் 1,842 பேர் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.
இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 33,804-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 20,458 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 23 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,519-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...