சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
Updated On :16 ஆகஸ்ட் 2021, 2:16 pm

DIN

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாகப் பதவி வகித்துவரும் தேஷ்முக் ஷேகர் சஞ்சய், தமிழ்நாடு சிறப்புப் படை 6-வது பட்டாலியன் பிரிவு (மதுரை) கமான்டண்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ரயில்வே எஸ்.பி.யாகப் பதவி வகித்து வரும் தீபா சத்யன் மாற்றப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறப்புப் படை 6-வது பட்டாலியன் பிரிவு (மதுரை) கமான்டண்ட்டாகப் பதவி வகித்துவரும் இளங்கோ, சென்னை ரயில்வே  எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் கடலோரப் பாதுகாப்புக் குழு எஸ்.பி.யாகப் பதவி வகித்துவரும் ஜெயந்தி, சேலம் மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாகப் பதவி வகித்துவரும் மகேஷ்குமார் மாற்றப்பட்டு, நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜியாகப் பதவி வகித்துவரும் கல்பனா நாயக், சென்னை ரயில்வே ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கல்வி விடுப்பில் இருந்த அபின் தினேஷ் மோதக், சென்னை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.