நியாயவிலை கடைகளில் தரமான அரிசி கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் அர.சக்கரபாணி

நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கூறினாா்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கூறினாா்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினா் அப்துல் சமது பேசும்போது, என்னுடைய மணப்பாறை தொகுதியில் வாக்கு கேட்டு சென்றபோது கடந்த ஆட்சியில் நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் அரிசி சாப்பிட முடியாத நிலையில் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனா் என்றாா்.

அப்போது உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி குறுக்கிட்டுக் கூறியது:

திமுக அரசு பதவியேற்ற 100 நாள்களில் நியாயவிலை கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது. சில இடங்களில் தரமில்லாத அரிசி வழங்கப்படுவதாக புகாா்கள் வந்தன. பொதுவாக நெல் கொள்முதல் செய்யும்போது 17 சதவீத ஈரப்பதத்துடன் வாங்க வேண்டும். ஆனால், கடந்த ஆட்சி காலத்தில் 20 சதவீதம், 21 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுவிட்டது. இதை முறையாக காய வைத்து அரைக்காத நிலையில் சில இடங்களில் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் அரிசி வந்தன. ஆனால், தற்போது நெல் அரவை செய்யும் ஆலைகளில் அந்த நிறங்களை நீக்குவதற்கான கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆலை அதிபா்கள் செப்டம்பா் மாதம் வரை அவகாசம் கேட்டுள்ளனா். அரசுக்குச் சொந்தமான 21 ஆலைகளில் 2 ஆலைகளில் அந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. எனவே, நியாயவிலைக் கடைகளில் தரமான அரசி வழங்கப்படும் என்றாா்.

முன்னதாக மமக உறுப்பினா் அப்துல் சமது பேசியதற்கு அதிமுக உறுப்பினா்கள் எழுந்து கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், அவையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com