‘கோவையிலும் மெட்ரோ கொண்டுவர வலியுறுத்தப்படும்’: முதல்வர்
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துவோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.


கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துவோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் கோவையில் மெட்ரோ திட்டம் கொண்டுவரப்படுமா என கோவை உறுப்பினர் வானதி சீரீனிவாசன் கேள்வி எழுப்பினர்.
அவர் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் கூறியது:
கோவைக்கு மெட்ரோ திட்டம் கொண்டுவர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மெட்ரோ திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசின் நிதியை பெற்று தான் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கான மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. கோவை மட்டுமின்றி மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...