நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கூடுதல் தளர்வுகள்: முதல்வர் ஸ்டாலின் நாளை(ஆக. 20) ஆலோசனை

பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

News image

முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated On :19 ஆகஸ்ட் 2021, 8:01 am

DIN

பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. தற்போது வைரஸ் பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

மேலும், தமிழகத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கம் ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனையில், திரையரங்கு திறப்பு, பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெற்றவுள்ள ஆலோசனயில் தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.