முன்னாள் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவையில் எழும்பூர் உறுப்பினர் பரந்தாமன் வியாழக்கிழமை பேசியுள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் தரமில்லாமல் கட்டப்பட்டிருப்பதாக கடந்த ஒரு வாரமாக புகார் எழுப்பப்பட்ட நிலையில், நேற்று அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்துள்ளது. சென்னை புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் கொண்டுவந்தார்.
அப்போது அவர் பேசுகையில், தொட்டாச்சிணுங்கி போல் தொட்டால் விழும் கட்டடத்தை அதிமுக கட்டியுள்ளது. புளியந்தோப்பில் 9 மாடிகள் கொண்ட கே.பி.பார்க் குடியிருப்பை 17 மாதங்களில் குறிகிய காலத்திலேயே கட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், யார் தவறு செய்தாலும் முதல்வர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். கட்டுமானப் பணியில் முறைக்கேடு உறுதி செய்யப்பட்டால், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
டெக்ஸ்லா முதல் தோற்ற போஸ்டர்!
மணிப்பூரில் பழங்குடியினர் பாதிக்கப்பட்டபோது அமைதி காத்த குடியரசுத் தலைவர் எங்களைக் குறிவைப்பது ஏன்? - மம்தா

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
அரசியலுக்கு அப்பாற்பட்டது குடியரசுத் தலைவர் பதவி: பிரதமர் மோடி
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

