இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அவிநாசியில் டேங்கர் லாரி மீது கண்டெய்னர் லாரி மோதல்: ஓட்டுநர் பலி

அவிநாசி அருகே டேங்கர் லாரி மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2021, 12:38 pm

DIN

அவிநாசி: அவிநாசி அருகே டேங்கர் லாரி மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

மங்களூரில் இருந்து தார் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. சேலம்- கோவை புறவழிச்சாலை அவிநாசி ராக்கியாபாளையம் பிரிவு அருகே வரும்போது புதிய திருப்பூர் நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி, எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

Story image

இதில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் நாகபட்டிணம் மாவட்டம், ஸ்ரீ வைத்தியம் பகுதியைச் சேர்ந்த கவியரசன்(25) பலத்த காயமடைந்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். சேலம்-கோவை ஆறு வழிச்சாலையில் ஏற்பட்ட விபத்தால், போக்குவரத்து பாதிப்பிற்குள்ளானது.

போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் அவிநாசி காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.