விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழகத்துக்கு மேலும் 11.76 லட்சம் தடுப்பூசிகள் வந்தன

தமிழகத்துக்கு மேலும் 11.76 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் 98 பெட்டிகளில் மகாராஷ்டிர மாநிலம் புணேயிலிருந்து விமானம் மூலம் சனிக்கிழமை சென்னை கொண்டுவரப்பட்டன.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 10:27 pm

DIN

தமிழகத்துக்கு மேலும் 11.76 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் 98 பெட்டிகளில் மகாராஷ்டிர மாநிலம் புணேயிலிருந்து விமானம் மூலம் சனிக்கிழமை சென்னை கொண்டுவரப்பட்டன.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 24 மணி நேரமும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் வசதிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கு அவரவா் வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகளை போடுவது போன்ற புதிய திட்டங்களையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. அத்துடன் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் வரும் செப்டம்பா் ஒன்றாம் தேதியிலிருந்து திறக்கப்படுவதால், மாணவா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசிகளை அதற்கு முன்பாகவே போட்டுக்கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் கூடுதலாக தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்புமாறு கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள மத்திய மருந்து கிடங்கிலிருந்து 11 லட்சத்து 76,000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை விடுவித்தது. அந்தத் தடுப்பூசிகள் அடங்கிய 98 பெட்டிகள் இண்டிகோ விமானத்தில் ஏற்றப்பட்டு சனிக்கிழமை சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தன.

அவற்றில் தமிழ்நாடு அரசுக்கு வந்த 11,55,170 டோஸ் தடுப்பூசிகள் அடங்கிய பெட்டிகள் மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அவை குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி சென்னைக்கு தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனா். மீதியுள்ள 20,830 தடுப்பூசிகள் தனியாா் மருத்துவமனைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.