வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம்: அதிமுக வெளிநடப்பு
மத்திய அரசு கொண்டு வந்த மூன்றுவேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.


சென்னை: மத்திய அரசு கொண்டு வந்த மூன்றுவேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
வேளாண் சட்டங்களை எதிர்க்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதும், அதனை எதிர்த்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்து பேசினார்.
வேளாண் சட்டத்திருத்த மசோதா மற்றும் சட்டத்திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அப்போது அறிவித்தார்.
மத்திய அரசின் மூன்று சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரு 7வது மாநிலமாக தமிழகம் உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டத்திருத்தங்களை எதிர்த்து, தில்லியின் எல்லைப் பகுதிகளில் பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...