வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

வேளாண் சட்டங்களை எதிர்க்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதும், அதனை எதிர்த்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர்.

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து, விவாதத்துக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது, வேளாண் சட்டத்திருத்த மசோதா மற்றும் சட்டத்திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். இத்தகைய சூலில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை முழுமையாக எதிர்க்கும் கடமை நமக்கு உளளது. இதற்கு அதிமுக ஆதரவு வழங்க வேண்டும். மத்திய அரசு விவசாய அமைப்புகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக சட்டத்திருத்தம் கொண்டு வந்திருப்பது சரியல்ல. 

வியர்வை சிந்தி உழைத்து விளைவிக்கும் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.  பல மாநில சட்டப்பேரவைகளில் வேளாண் சட்டத் திருத்தங்களை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்லமானம் கொண்டு வருவோம் என்பது தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. அதனை இன்று நிறைவேற்றியுள்ளோம். இந்த தீர்மானத்துக்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் மூன்று சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்திருக்கும் 7வது மாநிலமாக தமிழகம் உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டத்திருத்தங்களை எதிர்த்து, தில்லியின் எல்லைப் பகுதிகளில் பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com