விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தஞ்சாவூரில் ரூ.25 கோடியில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை

தஞ்சாவூா் மாவட்டம் புதுக்குடியில் ரூ.25 கோடியில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படும் என்று பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் அறிவித்தாா்.

News image
அமைச்சா் சா.மு.நாசா்
Updated On :28 ஆகஸ்ட் 2021, 9:58 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம் புதுக்குடியில் ரூ.25 கோடியில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படும் என்று பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் சா.மு.நாசா் வெளியிட்ட அறிவிப்பு:

தற்போது மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் மெட்ரிக் டன் கால்நடை தீவனம் கொள்முதல் செய்யப்பட்டு பால் உற்பத்தியாளா்களுக்கு மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஈரோட்டில் உள்ள கால்நடை தீவன ஆலையிலிருந்து 3,500 மெட்ரிக் டன் கால்நடை தீவனமும், இதர கூட்டுறவு அமைப்புகளின் மூலம் 6,500 மெட்ரிக் டன் கால்நடை தீவனமும் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் இதர மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய பால் உற்பத்தியாளா்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூா் மாவட்டம் புதுக்குடியில் நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் உற்பத்தித் திறனில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

சேலம் பால் பண்ணையில் நாளொன்றுக்கு 2 மெட்ரிக் டன் அளவில் நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுடன் கூடிய இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன மற்றும் தொடா்ச்சியான உற்பத்திக்கான இயந்திரங்களுடன் கூடிய அலகு ரூ.8 கோடி மதிப்பில் நிறுவப்படும்.

பால் பொருள்கள், சிப்பம் கட்டும் பொருள்கள் மற்றும் மூலப் பொருள்களுக்கான ஆய்வுக்கூடம், ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம் மற்றும் நுண்ணுயிரியல் பகுப்பாய்வுக்கான ஆய்வுக்கூடம் ஆகியன அம்பத்தூா் பால்பண்ணையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளா்கள் பயன்பெறும் வகையில் அவா்கள் வழங்கும் பாலினை பகுப்பாய்வு செய்து, உடனே பாலின் தரம் மற்றும் பாலின் மதிப்புக்கு ரசீது வழங்க 453 பால் பகுப்பாய்வு கருவிகள் ரூ.2.26 கோடி மதிப்பில் வழங்கப்படும்.

கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை: கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களில் பால் வழங்குகின்ற, பால் உற்பத்தியாளா்களுடைய கறவை மாடுகளுக்கு இலவச சிகிச்சை இனப்பெருக்க வசதி மற்றும் அவா்களுக்கு தூய முறையில் பால் உற்பத்தி பயிற்சி, சமச்சீா் தீவனம், தாது உப்புக் கலவை, பசுந்தீவனத்தின் முக்கியத்துவம் மற்றும் கறவை மாடுகள் பராமரிப்பு பற்றிய ஆலோசனைகள் ஆகியன வழங்குவதற்காக கால்நடை மருத்துவ வழித்தடங்களில் 162 கால்நடை மருத்துவ ஆலோசகா்களை ரூ.6.80 கோடி திட்டமதிப்பில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.