உத்தமபாளையம் : தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அப்பிபட்டியில் வாழைக்காய் ஏற்றிச் சென்ற சரக்கு வாகன ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு வாகனத்திலேயே மரணமடைந்தார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த காசிம்(50). இவர் சனிக்கிழமை அப்பிபட்டி பகுதியில் தோட்டத்திலிருந்து வாழைக்காய்களை சரக்கு வாகனத்தில் ஏற்றி மதுரை மேலூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது அப்பிபட்டி காளியம்மன் கோவில் வழியாக சென்றபோது ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு வாகனத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜன் மற்றும் சமூக ஆர்வலர் பாட்ஷா உள்ளிட்டோர் சின்னமனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த சின்னமனூர் காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சரக்கு வாகனத்தை ஓட்டி சென்ற போதே அதன் ஓட்டுநர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









