இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மதுரை மேம்பால விபத்து: 3 பேர் மீது வழக்குப் பதிவு

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

News image
மதுரையில் பறக்கும் பாலப் பணி விபத்து நடந்த பகுதியை பாா்வையிட்ட நிதித்துறை அமைச்சா் பிடிஆா். பழனிவேல் தியாகராஜன்
Updated On :29 ஆகஸ்ட் 2021, 6:06 am

DIN


மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மதுரையில் இருந்து நத்தம் வரை 44 கிலோ மீட்டா் தூரம் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை பாண்டியன் ஹோட்டல் சந்திப்பில் இருந்து செட்டிக்குளம் வரை 7.3 கிலோ மீட்டா் தூரம் ரூ.670 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்பட்டு வருகிறது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மதுரை - நத்தம் நான்கு வழிச்சாலை பணிகளை ஆஷிஸ் தாகூா் என்பவருக்கு சொந்தமான தனியாா் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் பாலத்திற்காக அமைக்கப்படும் தூண்களுக்கு இடையே, பாலத்தின் மேல் பகுதி, இணைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் வட மாநிலத் தொழிலாளா்கள் ஏராளமானோா் பணியாற்றி வருகின்றனா்.

மதுரை நாகனாகுளம் பகுதியில் பாலத்தின் இரு பகுதிகளிலும் பொதுமக்கள் இறங்கி ஏறுவதற்கு வசதியாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், இருதூண்களுக்கு இடையே பாலத்தின் மேல் பகுதியை ஹைட்ராலிக் ஜாக்கி மூலம் இணைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஹைட்ராலிக் ஜாக்கியில் கோளாறு ஏற்பட்டு பாலத்தின் மேல் பகுதி கீழே விழுந்து நொறுங்கியது. அங்கு பணியாற்றிய உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த ஆகாஷ் சிங்(24) இடிபாடுகளில் சிக்கி கை துண்டாகி பலத்த காயங்களுடன் பலியானாா்.

விபத்து குறித்து தகவலறிந்த மாநகா் காவல் துணை ஆணையா்கள் தங்கதுரை(சட்டம்-ஒழுங்கு), ஈஸ்வரன் (போக்குவரத்து) ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினா். 20-க்கும் மேற்பட்டவா்கள் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அனீஷ் சேகா் விபத்து நடந்த பகுதியை நேரில் பாா்வையிட்டாா். தொடந்து நிதித்துறை அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் மற்றும் மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் ஆகியோா் நிகழ்விடத்திற்குச் சென்று பாா்வையிட்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஹைட்ராலிக் இயந்திர ஒப்பந்த நிறுவன பொறுப்பாளர் பாஸ்கரனிடம் விசாரணையைத் தொடர்ந்து, மும்பையை தலைமையிடமாக கொண்ட கே.எம்.சி நிறுவன திட்ட பொறுப்பாளர் உள்ளிட்ட 3 பேர் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், விபத்து நடந்த பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். ஒப்பந்ததாரரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.