வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

திருச்சியில் கிரேன் விழுந்து ஒருவர் பலி: மற்றொருவர் காயம்

திருச்சியில் கிரேன் விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2021, 8:39 am

DIN

திருச்சியில் கிரேன் விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.

திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் தனியார் கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்த பணியின்போது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி பகுதியைச் சேர்ந்த ந. செல்வகுமார்(25) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சோமரசம்பேட்டை வாசன் சிட்டி பகுதியைச் சேர்ந்த உ.சரவணகுமார்(25) படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து திருச்சி உறையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த செல்வகுமாருக்கு விஷ்ணுப்பிரியா என்ற மனைவியும் நித்தின் கிரிஷ் என்ற மகனும் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.