திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து இரண்டாம் நாள் விழாவான ஞாயிற்றுக்கிழமை, சவுரி கொண்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வெகு விமரிசையாக மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா குறிப்பிடத்தக்கது. பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் கொண்டாடப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் பகல்பத்து விழா சனிக்கிழமை தொடங்கியது.

முதல் நாள் விழாவில் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, கையில் தங்கக் கிளியுடன் கூடிய ரத்தின அபயஹஸ்தம், நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜகீா்த்தி, பருத்திக்காய் காப்பு உள்ளிட்ட திருவாபரணங்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்துக்கு 8.15-க்கு சென்று சோ்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள். ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளைத் தரிசித்தனா்.

பகல்பத்து இரண்டாம் நாள் விழாவான ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில், சவுரி கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகாதுகாப்பு, தங்க கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்துக்கு சென்று சோ்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள். ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளைத் தரிசித்தனா்.

பகல்பத்தின் கடைசி நாளான வரும் 13 ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தா்களுக்கு காட்சி தருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் கொங்கு மண்டல உணவுத் திருவிழா இன்று தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் நடமாடும் வன விலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்
பேருந்தில் கஞ்சா கடத்திய 4 சிறாா்கள் கைது

தனியாா் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
