நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

'அம்பேத்கர் வழியில் இந்தியாவை பாதுகாக்க உறுதி ஏற்போம்' - முதல்வர் ஸ்டாலின்

அம்பேத்கர் காட்டிய வழியில் சமத்துவமும் சமூகநீதியும் மேலோங்கி நிற்கும் இந்தியாவைப் பாதுகாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image

அம்பேத்கர் 

Updated On :6 டிசம்பர் 2021, 5:47 am

DIN

அம்பேத்கர் காட்டிய வழியில் சமத்துவமும் சமூகநீதியும் மேலோங்கி நிற்கும் இந்தியாவைப் பாதுகாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய 'சட்டமேதை' டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் அரசியல் தலைவர்கள் பலரும் அம்பேத்கரை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒலித்து, அவர்தம் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட அறிவுச்சுடர் டாக்டர் அம்பேத்கர் நினைவுநாளில், அவர் காட்டிய வழியில் சமத்துவமும் சமூகநீதியும் மேலோங்கி நிற்கும் இந்தியாவைப் பாதுகாக்க உறுதியேற்போம்!' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.