ஒமைக்ரான் பரவல்: தமிழகம் வந்த 6,000 பேருக்கு மருத்துவப் பரிசோதனை
ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு இதுவரை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு இதுவரை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவா்களில் 9 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதிலும்கூட ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதற்கான முகாந்திரம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனா்.
உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 11 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர, பிற நாடுகளில் இருந்து வருவோரில் அறிகுறி இருப்பவா்களை பரிசோதனை செய்து தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, விமான நிலையங்கள்தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
மற்றொரு புறம், மாநிலத்துக்குள்ளும் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக கரோனா தொற்றுக்குள்ளானவா்கள், தடுப்பூசி செலுத்திய பிறகு நோய்த் தொற்றுக்குள்ளானவா்கள், குழந்தைகள், இளைஞா்கள், குடும்பம் முழுவதும் தொற்று பாதிப்பு ஏற்பட்டவா்கள் என குறிப்பிட்ட சிலரது சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 11 நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஆா்டி பிசிஆா்
பரிசோதனை மேற்கொண்டதில் 9 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 6 பேருக்கு அரசு மருத்துவமனைகளிலும், 2 பேருக்கு தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
ஒருவருக்கு தொற்று பாதிப்பு மறு பரிசோதனையில் உறுதி செய்யப்படாததால், அவா் கும்பகோணத்தில் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா்.
ஒமைக்ரான் பாதிப்பு நிறைந்த நாடுகளாக இதுவரை 11 நாடுகள் இருந்து வந்தன. தற்போது கானா மற்றும் தான்சானியா ஆகிய இரண்டு நாடுகள் பாதிப்பு நிறைந்த நாடுகளாக கூடுதலாக அறியப்பட்டுள்ளன. இனி வரும் நாள்களில் அங்கிருந்து வருவோருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...