தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 710 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று 719 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 710 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை (டிச.7) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1,00,393 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 710 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,31,945-ஆக அதிகரித்துள்ளது.
ஒருநாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,549-ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து 731பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,87,414-ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு
சென்னையில் புதிதாக 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,58,879-ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 122 பேரும், செங்கல்பட்டில் 57 பேரும், ஈரோட்டில் 56 பேரும், திருப்பூரில் 52 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

