இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு குன்னூர் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூலூரிலிருந்து இன்று காலை விளிங்டன் ராணுவ தளத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.
இதையும் படிக்க | விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் விபின் ராவத்
இந்நிலையில், குன்னூர் அருகே ஹெலிகாப்டர் சென்ற போது விபத்துக்குள்ளானது. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விபின் ராவத்தின் நிலை என்ன என்று தகவல் தெரியாத நிலையில் தில்லியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.
மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு குன்னூர் வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று குன்னூர் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


