காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

பொதுத் துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையில் இருப்பதால் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
Updated On :8 டிசம்பர் 2021, 7:35 am

DIN

பொதுத் துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையில் இருப்பதால் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 

2003 ஆம் ஆண்டு மின்சாரத் திருத்தச் சட்டத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்த முன்வடிவை திரும்பப் பெற வேண்டும். 

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத் திருத்தம், தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், பொதுத் துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் இருப்பதோடு, மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவும் உள்ளது.

எனவே, இந்தச் சட்டத் திருத்த முன்வடிவினை திரும்பப் பெறுமாறு பிரதமரை கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மின்சார சட்டத் திருத்த மசோதா

மானியங்கள் இன்றி மின் கட்டணம் நிர்ணயித்தல், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர், உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்தல், மின் உற்பத்தி - விநியோக நிறுவனங்களுக்கு இடையான ஒப்பந்தங்களை கண்காணிக்க அமைக்கப்படும் ஆணையம் மத்திய அரசின் கீழ் செயல்படுதல், மின் நுகர்வு, விற்பனை மீதான வரியை விதிக்கும் மாநிலத்தின் அதிகாரம் பறிபோதல் ஆகியவற்றினால் மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.