விபின் ராவத் உடலை எடுத்துச் செல்ல தயார் நிலையில் ராணுவ வாகனங்கள்
வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களை எடுத்துச் செல்ல ராணுவ வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களை எடுத்துச் செல்ல ராணுவ வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர்
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.

தயார் நிலையில் ராணுவ வாகனம்
இதையடுத்து வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் உடல்களை அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று ராணுவ வாகனங்கள் மூலம் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டருக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.

மலரால் அலங்கரிக்கப்பட்ட வாகனம்
அங்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களின் உடல்கள் தில்லிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...