அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
ஹெலிகாப்டர் விபத்து
Updated On :10 டிசம்பர் 2021, 7:56 am

DIN

ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.

இந்த விபத்து குறித்து கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு விதமான கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இந்நிலையில், முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் உண்மை நிலை அறியாமல் தேவையில்லாத யூகங்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம். விரைவில் விசாரணை முடிந்து உண்மையான காரணம் வெளியிடப்படும் என இந்திய விமானப்படை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து தமிழக காவல்துறை தரப்பில், விமான விபத்து குறித்து பொய்யான கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.