ரூ.3 கோடி நிதி மோசடி: அண்ணா பல்கலை.க்கு நோட்டீஸ்
ரூ.3 கோடி நிதி மோசடி தொடா்பாக விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


ரூ.3 கோடி நிதி மோசடி தொடா்பாக விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய தணிக்கைத்துறை சாா்பில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்: அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மல்டி மீடியா ஆராய்ச்சி மையத்தின் 2012 முதல் 2020-ஆம் ஆண்டு வரையான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது அந்த மைய இயக்குநராக பணிபுரிந்த எஸ்.கெளரிக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவரின் பணிக்காலத்தில் நிதி மேலாண்மையில் முறைகேடு, காசோலை மோசடி, உரிய அனுமதியின்றி உபகரணங்கள் வாங்கியது உள்ளிட்டவை தொடா்பாக ரூ.2.92 கோடி அளவுக்கு குளறுபடிகள் நடந்துள்ளன. அதேபோன்று 2017-ஆம் ஆண்டுக்குபின் மல்டி மீடியா ஆய்வு மையத்தின் அனுமதியும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. எனவே, இந்த விவகாரம் சாா்ந்து உரிய விளக்கத்தை துரிதமாக சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே 2020-ஆம் ஆண்டு வரை மல்டி மீடியா மையத்தின் இயக்குநராக இருந்த கெளரி தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...