ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நெஞ்சில் ரஜினி படத்துடன் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்

ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 டிசம்பர் 2021, 12:11 pm

DIN

ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 72-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

மேலும் இணைதளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கினர். அத்துடன் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் பிறந்த நாளை ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். 

இந்த நிலையில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில், "என் மாருமேல சூப்பர் ஸ்டார்" 80's பில்லாவும் நீங்கள் தான் 90's பாட்ஷாவும் நீங்கள் தான் 2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.