தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கரோனா உயிரிழப்பு: நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

கரோனாவால் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்கள் ரூ.50 ஆயிரம் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2021, 2:43 pm


கரோனாவால் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்கள் ரூ.50 ஆயிரம் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக www.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அரசின் நிவாரணத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 4.75 லட்சம் பேர் உயிரிழந்தனர்.  

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் மாநில அரசி பேரிடர் நிதியிலிருந்து இந்த தொகை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. 

இதேபோன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி பதிலளித்த தமிழக அரசு,  தமிழகத்தில் கரோனாவால் 36,220 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. 

இதனையடுத்து, கரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது.

அதில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மற்றும்  தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்.

கரோனா தொற்று கண்டறியப்பட்ட காலம் முதல் கரோனா பெருந்தொற்று அல்ல (அல்லது) வேறு உத்தரவுகள் வரும் வரையிலான காலக்கட்டத்திற்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.