திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

2,100 அரசுப் பேருந்துகளில் அவசர ஒலி அழைப்பு வசதி: அமைச்சர் ராஜகண்ணப்பன் 

சென்னையில் முதற்கட்டமாக 2100 அரசு  பேருந்துகளில்  அவசர ஒலி அழைப்பு (பேனிக் பட்டன்) அமைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

News image
2,100 அரசுப் பேருந்துகளில் அவசர ஒலி அழைப்பு வசதி: அமைச்சர் ராஜகண்ணப்பன் 
Updated On :14 டிசம்பர் 2021, 7:51 am

DIN


சென்னையில் முதற்கட்டமாக 2100 அரசு  பேருந்துகளில்  அவசர ஒலி அழைப்பு (பேனிக் பட்டன்) அமைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நிர்பயா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பேருந்திலும் மூன்று இடங்களில் கண்காணிப்பு காமெராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதேபோல ஒவ்வொரு பேருந்திலும் 4 அவசர அபாய ஒலி எழுப்பும் பட்டன் அமைக்கப்படும். இதன் மூலம், பணிமனைக்கு தகவல் உடனடியாகப் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க இலவச அழைப்பு எண்களை அனைத்து பேருந்துகளும் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

பேருந்துகளில் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், நரிக்குறவர்கள் என பல தரப்பினரும் பேருந்தில் பயணம் செய்வார்கள். ஆனால் சில நடத்துநர்கள் அவர்களை இறக்கிவிடுகின்றனர். எனவே, இது தொடர்பாக நடத்துநர் ஓட்டுநர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்குவது, ஆர்.டி.ஓ. மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தீபாவளி போன்று பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.

14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் 29 ம் தேதி அங்கீகரிக்கப்படும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தபடும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.