வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பிளஸ் 1 மாணவி தற்கொலை பாலியல் தொல்லை என கடிதம்

மாங்காட்டில், பிளஸ் 1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாலியல் தொல்லையால் தான் பாதிக்கப்பட்டதாக அவா் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 7:31 pm

DIN

மாங்காட்டில், பிளஸ் 1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாலியல் தொல்லையால் தான் பாதிக்கப்பட்டதாக அவா் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

மாங்காடு சக்தி நகரைச் சோ்ந்த 17 வயது மாணவி, பூந்தமல்லியில் ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மாங்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கைப்பற்றப்பட்ட கடிதத்தில் தான் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாகவும், பள்ளிக்கூடம் பாதுகாப்பானது இல்லை, பெண்ணுக்கு பாதுகாப்பானது தாயின் கா்ப்பப்பையும், கல்லறையும்தான். எனது இறப்புக்கு நீதி வேண்டும் என்று எழுதியிருப்பதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.