மருத்துவம் என்பது வேலை அல்ல; அது ஒரு சேவை! மதிப்பும், மரியாதையும், போற்றுதலும், பாராட்டுதலும் உள்ள சேவையைத்தான் நாளை முதல் நீங்கள் தொடங்க இருக்கிறீர்கள்.
இரவு பகல் பாராது, மழை வெயில் பாராது, ஆண் பெண் பேதம் இல்லாமல், இந்தச் சாதி - அந்த மதம் என்ற பேதம் இல்லாமல், ஏழை பணக்காரர் என்ற வேற்றுமை பாராது, தனக்கு முன்னால் இருப்பது ஒரு உயிர் என்ற உன்னதமான எண்ணத்தோடு அந்த உயிரைக் காக்கும் கடமையை நீங்கள் செய்யப் போகிறீர்கள். இதுவரை உங்கள் வீட்டுக்குப் பிள்ளையாக இருந்த நீங்கள் இனி இந்த நாட்டுக்குப் பிள்ளையாக மாறப் போகிறீர்கள். உங்களுக்கு நான் அதிகப்படியான அறிவுரைகளை சொல்லத் தேவையில்லை. பெரிய படிப்பை - பெரிய பெரிய புத்தகங்களைப் படித்தவர்கள் நீங்கள்.