சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ஒமைக்ரான் சிகிச்சைக்கு 1.25 லட்சம் படுக்கைகள் தயாா்

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில் மொத்தம் 1.25 லட்சம் படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2021, 8:11 pm

விருதுநகா்: ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில் மொத்தம் 1.25 லட்சம் படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

விருதுநகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறைவு பெற்ற கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் மா. சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் மா. சுப்பிரமணியன் கூறியது: ஜன. 12 -இல் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலிருந்து 11 புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமா் மோடி, முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க 1.25 லட்சம் படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. என்றாா். ஆய்வின் போது, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி, மருத்துவக் கல்லூரி முதன்மையா் சங்குமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி: முன்னதாக சென்னையிலிருந்து மதுரை வந்த அமைச்சா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசு குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தினால், அதனை முதலில் தொடங்குவது தமிழகமாகத்தான் இருக்கும். ‘யூ டியூப்’ பாா்த்து பிரசவம் என்பது தவறான அணுகுமுறை. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து ஒமைக்ரான் போன்ற அச்சுறுத்தல்கள் இருந்து கொண்டிருப்பதால் கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடும்போது கரோனா விதிமுறைகளை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

இதில் வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூமிநாதன், வெங்கடேசன், மருத்துவக் கல்வி இயக்குநா் ஆா்.நாராயணபாபு, பொது சுகாதாரத்துறை இயக்குநா் டி.எஸ். செல்வ விநாயகம், மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநா் கணேஷ், மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேல் ஆகியோா் கலந்து கொண்டனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.