ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.61 லட்சம் பறிமுதல்
ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.61லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.61 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 3 வது மாடியில் ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள 42 பேரூராட்சி்களின் மண்டலமாக செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், மாவட்டத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக நேற்று ஒப்பந்தம் கோரப்பட்டு இருந்த நிலையில், இந்த பணிக்களுக்காக லஞ்சம் கேட்கப்படுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு புகார்கள் சென்றன.
புகாரின் பேரில் இன்று (டிச.22) ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் திடிரென ஈரோடு லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் மீது கணக்கில் வராத ரூ.61 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணம் தொடர்பாக அதிகாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் ரூ.1 கோடிக்கும் மேல் லஞ்ச தொகை இருக்கும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...