தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்து பிறப்பையொட்டி தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
இயேசு பிரான் அவதரித்த நாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் பிறந்ததையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சென்னை சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி, நாகை வேளாங்கண்ணி தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

குரோம்பேட்டை தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இதேபோன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை ஆகிய மாவட்டங்களிலுள்ள தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
புதுச்சேரியில் உள்ள முக்கிய தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்னை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பொதுமக்களும் தங்களது வீடுகளிலும் கிறிஸ்துமஸ் குடில்கள், ஸ்டார்கள் அமைத்து மின்விளக்கு அலங்காரத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவாலயங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து சிறப்பு ஆராதனை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பிரியாணி பொட்டலங்கள் பறிமுதல்
முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்! - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

