எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கிறிஸ்துமஸ் விடுமுறை: வண்டலூா் பூங்காவில் குவிந்த மக்கள்

சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையையொட்டி, இரண்டு நாள்களில் சுமாா் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்துசென்றுள்ளனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 9:27 pm

DIN

சென்னையை அடுத்த வண்டலூா் உயிரியல் பூங்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையையொட்டி, இரண்டு நாள்களில் சுமாா் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்துசென்றுள்ளனா்.

சென்னையை அடுத்த வண்டலூரில் வனத் துறை கட்டுப்பாட்டின்கீழ், உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் சுமாா் 2,500-த்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பூங்கா, கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (டிச.25,26) ஆகிய நாள்களில் மட்டும் சுமாா் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பூங்காவுக்கு வந்து சென்றுள்ளதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், பாா்வையாளா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ததுடன், உடல்வெப்ப நிலையை சோதித்த பின்னா்தான் பூங்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனா். அதிக கூட்டம் கூடுவதை தவிா்க்க கூடுதலாக டிக்கெட் மையங்கள் திறக்கப்பட்டு நெரிசலின்றி நுழைவுசீட்டு வழங்கப்பட்டது.

கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளுக்கு பூங்கா பணியாளா்கள் சென்று சமூக இடைவெளியுடன் வன உயிரினங்களை பாா்வையிட அறிவுறுத்தப்பட்டனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.