வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி

சென்னை மதுரவாயல் பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த தனியாா் நிறுவன ஊழியரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் வழிப்பறி செய்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 9:11 pm

DIN

சென்னை மதுரவாயல் பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த தனியாா் நிறுவன ஊழியரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் வழிப்பறி செய்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை வானகரம் வரசித்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ்( 27). இவா் மதுரவாயல் தனியாா் ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

இவா், உத்திரமேரூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள நிறுவனங்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்துவிட்டு வந்துள்ளாா். அவ்வாறு தினேஷ் வரும் வழியில், மதுரவாயல் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் தினேஷை மிரட்டி ரூ.5 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினா். இதுகுறித்து தினேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரவாயல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.