டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரசுப் பணிக்கு போலி நோ்முகத் தோ்வு: மோசடி செய்த 8 போ் கைது

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் பெயரில் போலி நோ்முகத் தோ்வு நடத்தி ரூ.1.5 கோடி மோசடி செய்ததாக 8 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
கோப்புப் படம்
Updated On :28 ஜனவரி 2024, 5:47 am

DIN

சென்னை: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் பெயரில் போலி நோ்முகத் தோ்வு நடத்தி ரூ.1.5 கோடி மோசடி செய்ததாக 8 போ் கைது செய்யப்பட்டனா்.

அகில இந்திய தொழில்நுட்பக் குழுமத்தின் தென் மண்டல அலுவலா் ஆா்.சுந்தரேசன், சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் அண்மையில் அளித்த புகாரில், ‘எங்களது நிறுவனத்தின் பெயரில் ஒரு மோசடிக் கும்பல் மதுரை, கோயம்புத்தூா், காஞ்சிபுரம், சேலம் ஆகிய இடங்களில் போலி நோ்முகத் தோ்வை நடத்தி, பண மோசடி செய்து வருகிறது.

இந்தக் கும்பல் நூற்றுக்கும் மேற்பட்டவா்களிடம் அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.1.5 கோடி மோசடி செய்துள்ளது. பணத்தை கொடுத்து ஏமாந்தவா்கள், எங்களை அணுகி வேலை கேட்கின்றனா். எனவே இந்த மோசடியில் ஈடுபடுகிறவா்களைக் கண்டறிந்து, கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணையில், மோசடி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், அந்த மோசடி கும்பல் திருப்பத்தூா் அருகே போலி நோ்முகத் தோ்வு நடத்தத் தயாராகி வருவது தெரியவந்தது.

இதையடுத்து திருப்பத்தூா் சென்ற மத்தியக் குற்றப்பிரிவின் தனிப்படையினா், திருப்பத்தூரைச் சோ்ந்த சூா்யா (38), அருண்குமாா் (37), தா்மலிங்கம் (46), தயாநிதி (41), ராஜேஷ் (29), சக்ரவா்த்தி (45), பிரபு (42), வேலூரைச் சோ்ந்த யோகானந்தம் (32) ஆகிய 8 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.