சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்பதால் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால், நேற்று மாலை முதல் அண்ணா சாலை, அம்பத்தூர், போரூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரமாக மக்கள் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் முதல்வர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,
நேற்று எதிர்பாராதவிதமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இன்று 31.12.2021 ஒரு நாள் மட்டும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், அத்தியாவசிய சேவைகள் தவிர, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.