பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதா? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

தமிழக மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளித்தது மனிதாபிமானம் இல்லாத செயல் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 

News image
மதுரை  உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
Updated On :31 டிசம்பர் 2021, 11:02 am

DIN

தமிழக மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளித்தது மனிதாபிமானம் இல்லாத செயல் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 
புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 68 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே 68 இந்திய மீனவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன்திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளித்தது மனிதாபிமானம் இல்லாத செயல். மீனவர்களை தனிமைப்படுத்தி அதன்பின்னர் கரோனா பரிசோதனை செய்திருக்கலாம். இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். 
பொங்கலுக்கு முன்பாகவே தமிழக மீனவர்களை மத்திய அரசு அழைத்து வரும் என நம்புவதாக நீதிமன்றம் தெரிவித்தது. மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 68 மீனவர்களும் அவர்களது குடும்பத்துடன் தொலைப்பேசியில் பேச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.