சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மீண்டும் 37 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது ஒரு சவரன் தங்கம்

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் 37 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

News image
Again low gold below 37 thousand
Updated On :2 பிப்ரவரி 2021, 6:14 am

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் 37 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, ஏற்ற இறக்கமாகவே உள்ளது. 

இதன் தொடா்ச்சியாக சென்னையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.36,760- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து, ரூ.4,595 ஆக உள்ளது. 

வெள்ளி கிராமுக்கு ரூ.2.50 காசுகள் குறைந்து, ரூ.76.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,500 குறைந்து, ரூ.76.800 ஆகவும் விற்பனையாகிறது.

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,595

1 சவரன் தங்கம்...............................36,760

1 கிராம் வெள்ளி.............................76.80

1 கிலோ வெள்ளி.............................76,800

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,625

1 சவரன் தங்கம்...............................37,000

1 கிராம் வெள்ளி.............................79.20

1 கிலோ வெள்ளி............................79,200
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.