/

மானாமதுரையில் குழந்தைகள் உதவிக்காகத் திட்டத் துவக்க விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே காவல்துறை  சார்பில் குழந்தைகள் உதவிக்காக ("operation smile 2021")  திட்ட நிகழ்ச்சி துவக்க விழா நடைபெற்றது.

News image
மானாமதுரை ரயில் நிலையத்தில் குழந்தைகள் உதவிக்காக நிகழ்ச்சி துவக்க விழாவில் சைல்டு லைன் துணை மைய இயக்குனர் பி.எஸ் வனராஜன் கலந்து கொண்டு பேசினார்.
Updated On :2 பிப்ரவரி 2021, 7:15 am

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே காவல்துறை சார்பில் குழந்தைகள் உதவிக்காக ("operation smile 2021")  திட்ட நிகழ்ச்சி துவக்க விழா நடைபெற்றது.

இந்த திட்டத்தின்படி காணாமல் போன குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், மற்றும் சிறார் தொழிலாளர்கள், மீட்கப்படும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் போது மேல் நடவடிக்கைக்காக அவர்கள் குழந்தைகள் நலக் குழவில் ஒப்படைக்கப்படுவார்கள்.

நிகழ்ச்சியில்  சைல்டுலைன் துணை மைய இயக்குநர்  பி.எஸ்.வனராஜன் ரயில்வே காவலர்கள் ராஜேஷ் கண்ணன், சிறப்புப் பிரிவு ராஜ்மோகன், பெண் தலைமைக் காவலர் உஷா ரயில்வே நிலைய அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.