டிரான்ஸ்பார்மரில் வேன் மோதி விபத்து; 3 பெண்கள் காயம்
ஊத்துக்கோட்டை அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வேன், டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து ஏற்பட்டதில் 3 பெண்கள் காயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான வேன்

விபத்துக்குள்ளான வேன்
ஊத்துக்கோட்டை அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வேன், டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து ஏற்பட்டதில் 3 பெண்கள் காயமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ஆரணி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 10 பெண்கள் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
காலையில் பணிக்குச் செல்வதற்காக இவர்களை ஏற்றிக் கொண்டு வேன், கீர் முதலம்பேடு கிராமத்திலிருந்து அந்தேரி ஆரணி வழியாக மாதவரம் சென்றடைகிறது.
இந்த நிலையில், ஆரணியில் வந்தபோது ஓட்டுநர் ராஜேஷ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், வேனில் பயணித்த கீழ்முதலம்பேடு பகுதியைச் சேர்ந்த சந்தியா, பணம்சேரியைச் சேர்ந்த சலோமியா, ஏ.என். குப்பத்தைச் சேர்ந்த உஷா ஆகிய மூன்று பெண்கள் காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அருகில் ஆரணி சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆரணி போலீஸார் விபத்தை ஏற்படுத்தி தலைமறைவான ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். டிரான்ஸ்பார்மரில் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...