கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழாவில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரியை அடுத்த வரட்டனப்பள்ளியில் எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாமல் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களையும், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எருதுகளும் பங்கேற்றன. குறிப்பிட்ட தூரத்தை மிகக் குறைந்த வினாடியில் கடக்கும் எருது சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளருக்கு பரிசு வழங்குவர்.

இந்த எருது விடும் விழாவை காண கிருஷ்ணகிரி மாவட்டம் அல்லாமல் ஆந்திரம், கர்நாடகம், திருப்பத்தூர், வேலூர், தருமபுரி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் இந்தப் போட்டியை பார்வையிட்டனர். இந்த எருது விழாவின்போது எருதுடன் கட்டப்பட்ட கயிறு காலில் சிக்கியது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு விஜய நகரத்தை சேர்ந்த பத்மநாபன்(41), என்பவர் காயம் அடைந்தார். அவரை பெங்களுரூவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்கு ஆயுதம் வழங்கியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை: சீனா

தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய தமிழ் சீரியல் நடிகை!

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


