கரோனா தொற்றால் தீவிர நுரையீரல் பாதிப்புக்குள்ளான உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ் வியாழக்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ் கடந்த ஜனவரி மாதம் 5-ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் எம்ஜிஎம் ஹெல்த் கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடுமையான நுரையீரல் பாதிப்பு மற்றும் சுயமாக சுவாசிப்பதில் பிரச்னை இருந்ததால் செயற்கை சுவாச சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டன. பின்னர் கரோனா தொற்றில் இருந்து விடுபட்ட நிலையில், சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து முழுவதும் குணமடைந்த நிலையில் அவர் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும் சில நாள்கள் வீட்டில் ஓய்வு பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு!

ஃப்ரிட்ஜ், கேஸ் சிலிண்டருடன் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

சாத்தான்குளம் வழக்கு! தீர்ப்புக்குப் பின் உடைக்கப்பட்ட பேனா முனை!! அர்த்தம் என்ன?

ஆந்திரத்தின் தலைநகர் அமராவதி! அரசிதழில் வெளியீடு!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


