கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணிபுரியும் காவலர்களுக்கு மனவள புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி காவல் நிலைய ஆய்வாளர் கதிர்வேல்,ஆரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர்.
இந்த மனவள புத்தாக்கப் பயிற்சியில் கும்மிடிப்பூண்டி, ,சிப்காட், ஆரம்பாக்கம், பாதிரிவேடு காவல் நிலைய காவலர்கள், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள், கும்மிடிப்பூண்டி போக்குவரத்து காவல் நிலைய காவலர்கள், கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு பிரிவு காவலர்கள் என சுமார் 100 பேர் பங்கேற்றனர்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஏடிஎஸ்பிக்கள் முத்துசாமி, மீனாட்சி பங்கேற்று காவலர்களுக்கு மனவள பயிற்சி அளித்து சிறப்புரையாற்றினர்.

இந்த பயிற்சியில் காவலர்கள் பணியினை மகிழ்சியாக செய்வது, பணி நேரத்தில் மன அழுத்தம் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது, பணி முடிந்து வீடு திரும்பியதும் பணி சுமையை மறந்து குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக களிப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
நிகழ்வில் வெளிச்சம் அறக்கட்டளை சார்பில் காவலர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. மேலும், மருத்துவர் பிரேம்குமார் பங்கேற்று காவலர்கள் உடல் நலனை பராமரிப்பது, மன அழுத்தம் குறைக்க எளிய வழிகள், உணவு முறை குறித்து பேசினார்.
நிகழ்வின் முடிவில் பேசிய டிஎஸ்பி ரமேஷ் கரோனா காலத்தில் காவல்துறையினர் திகமாக மன ரீதியாக பாதிக்கப்பட்டாலும் அவைகளை மறந்து பணியில் உறுதியாக இருந்த சூழலில், பணி, குடும்பம் இவைகள் இரண்டையும் பக்குவமாக கையாள்வதன் மூலமூம், யோகாப்பயிற்சியை தொடர்ந்து பழகுவதன் மூலமும் மன அழுத்தம் கொள்ளாமல் இருக்க பழகி கொண்டால், பணி சுமையால் தற்கொலை, பணி நேரத்தில் மாரடடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவதை சமாளிக்கலாம் என்றார்.
நிகழ்வில் காவலர்கள் பங்கேற்ற பாட்டு போட்டி, நடன போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


