தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: பொதுப்பணித் துறை

ஆந்திரத்திலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் மூலமாக 7 டிஎம்சி கிடைத்துள்ளது. இதனால் சென்னைக்கு இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. 

News image
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது.
Updated On :4 பிப்ரவரி 2021, 8:20 am

DIN

சென்னையின் குடிநீருக்காக ஆந்திரத்திலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் மூலமாக இதுவரை 7 டிஎம்சி நீர் கிடைத்துள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சென்னையின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க கடந்த 1983-ஆம் ஆண்டு தமிழக-ஆந்திர அரசுகளிடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஆண்டுதோறும் ஜூன் முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது.

YouTube video thumbnail

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. தற்போது வரை 7 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.33 டிஎம்சி தண்ணீரில், 4 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தற்போது கிடைத்துள்ள 7 டிஎம்சி தண்ணீரால், சென்னைக்கு இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய நிலவரப்படி கண்டலேறு அணையில் இருந்து 1,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு விநாடிக்கு 430 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.