மன்னார்குடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியில் இருவர் உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இரண்டு பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இரண்டு பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள ராஜ கொத்தமங்கலம் நாகப்பன் மகன் பன்னீர்செல்வம்(62). இவரது மகன் காளிதாஸுக்கு வருகின்ற 15-ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதையடுத்து, தஞ்சாவூரில் உள்ள உறவினருக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக, தனது உறவினர் திருத்துறைப்பூண்டி பள்ளாக்கொல்லை ஜெயராமன் மகன் விக்னேஷ்(38) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இவர்கள் சென்ற வாகனம், மன்னார்குடி - தஞ்சை முக்கிய சாலை காரிக்கோட்டை என்ற இடத்தருகே வந்த போது, அவ்வழியே வந்த காருடன் நேருக்கு நேர் மோதியதில், நிகழ்விடத்திலேயே பன்னீர்செல்வம் உயிரிழந்தார்.
காயமடைந்த விக்னேஷ், காரை ஓட்டி வந்த மன்னார்குடி பூக்கொல்லைசாலை கட்டமணி மகன் ரமேஷ் (49) ஆகிய இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில், விக்னேஷ் உயிரிழந்தார். ரமேஷுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, வடுவூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...