தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. சார்பில் வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக விழுப்புரம் மண்டல மையம் சார்பில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்


விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மண்டல மையத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு துறை மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. மண்டல மையம் சார்பில் மிகப்பெரிய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.
வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் பாலமுருகன் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் சென்னை, புதுவை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 90 தனியார் நிறுவனத்தினர் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு நேர்காணல் நடத்தி தேர்வு செய்தனர்.
10-ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, பொறியியல், ஐடிஐ, பட்டப்படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள இளைஞர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தனியார் நிறுவன பிரதிநிதிகள் நேர்முகத் தேர்வை நடத்தி தகுதியுள்ள ஆள்கள் தேர்வு செய்தனர். 8,000 வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்யும் வகையில் தொடங்கிய அந்த முகாம் தொடர்ந்து மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
பிற்பகல் வந்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே. பார்த்தசாரதி, தனியார் வேலைவாய்ப்பு முகாமில் முதலில் தேர்வு செய்யப்பட்ட 250 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மண்டல இயக்குனர் பாண்டிய வடிவு, இயக்குனர் மீனாம்பிகை மற்றும் வேலைவாய்ப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...