ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஒற்றுமையோடு தேர்தல் பணியாற்ற வேண்டும்: ஓபிஎஸ்-ஈபிஎஸ்

​அதிமுகவினர் ஒற்றுமையோடு விழிப்புடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

News image
Updated On :6 பிப்ரவரி 2021, 2:07 pm

DIN


அதிமுகவினர் ஒற்றுமையோடு விழிப்புடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

'இந்தக் கூட்டத்தில் எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும்' என்ற ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் ஒற்றுமையோடு விழிப்புடன் தேர்தல் பணியாற்றி, கட்சிக்கு வெற்றியை ஈட்டுவது குறித்து இருவரும் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து வெளிவந்துள்ள சசிகலா வரும் 8-ம் தேதி தமிழகம் வருகிறார். இந்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.